குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லையே! சுமை துாக்கும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லையே! சுமை துாக்கும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
UPDATED : செப் 03, 2026 07:30 PM
ADDED : செப் 03, 2026 07:04 PM
திருப்பூர்:திருப்பூர் மற்றும் வஞ்சிபாளையம் ரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் கூட்செட் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமைப்பணி சம்மேளன மாநில செயலாளர் அருள்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சுமைப்பணி ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன், மாவட்ட தலைவர் ராஜகோபால், செயலாளர் பாலன், பொருளாளர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட செயலாளர் உன்னிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
போதிய கழிப்பிட வசதி இல்லாததால் பெண் தொழிலாளர்கள் சிரமப்படுவதாகவும், தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், குடிநீர் வசதி இல்லாததால் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளதாக கூறிய அவர்கள், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கூட்செட்டில் பிரத்யேக குடிநீர் வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
