/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிதன்யா வழக்கில் தலையீடு இல்லை; அமைச்சர் சாமிநாதன் தகவல்
/
ரிதன்யா வழக்கில் தலையீடு இல்லை; அமைச்சர் சாமிநாதன் தகவல்
ரிதன்யா வழக்கில் தலையீடு இல்லை; அமைச்சர் சாமிநாதன் தகவல்
ரிதன்யா வழக்கில் தலையீடு இல்லை; அமைச்சர் சாமிநாதன் தகவல்
ADDED : ஜூலை 16, 2025 11:15 PM
திருப்பூர்; திருப்பூரில் நடக்கும் பஸ் ஸ்டாண்ட் திறப்பு உட்பட பல நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வரும், 22ம் தேதி வருகிறார்.
இதனையொட்டி, கோவில்வழியில், கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்டில், ஆய்வு மேற்கொண்ட செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:
கோவில் வழியில், முதல்வர் திறக்கப்பட உள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து தேனி, கம்பம், மதுரை உட்பட தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்டாண்டுக்கு, 242 பஸ்கள் வந்து செல்கிறது. பள்ளி வகுப்பறையில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைப்பது சோதனை முறையில் நடக்கிறது.
மாணவர்கள் பின் வரிசையில் அமராமல், இந்த முறையில் ஆசிரியர்களை நேரில் பார்ப்பதால், எளிதாக பாடங்களை புரிந்து படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
எனவே, இந்த திட்டம் வெற்றி பெறும் என நம்புகிறோம். அவிநாசியில், இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். உரிய முறையில் அவ்வழக்கு விசாரணை நடத்தப்படுகிறது. அதில், யாருடைய தலையீடும் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.