தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பயனுக்கு வராத நடை மேம்பாலம் மாற்றி அமைக்கும் திட்டமும் வரவில்லை

 பயனுக்கு வராத நடை மேம்பாலம் மாற்றி அமைக்கும் திட்டமும் வரவில்லை

 பயனுக்கு வராத நடை மேம்பாலம் மாற்றி அமைக்கும் திட்டமும் வரவில்லை


ADDED : ஜன 24, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 04:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, ரூ.1.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட, நடை மேம்பாலம் பயனில்லாமல் வீணாகி வருகிறது. மாற்றி அமைக்க திட்டமிட்டும், செயல்பாட்டிற்கு வரவில்லை.

உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து, கல்பனா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, கச்சேரி வீதி என பிரதான ரோடுகளில் அமைந்துள்ள, அரசு, தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தாலுகா அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள், பழநி - பொள்ளாச்சி ரோட்டை போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், பிரதான ரோட்டை பொதுமக்கள் எளிதாக கடக்கும் வகையில், 10 ஆண்டுக்கு முன், 1.5 கோடி செலவில், லிப்ட் உடன் கூடிய நடை மேம்பாலம் கட்டப்பட்டது.

தொடர்ந்து இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் நடை மேம்பாலம், மக்களுக்கு பயனின்றி வீணாகி வருகிறது.

இரு புறமும் கடைகள் ஆக்கிரமித்துள்ளதோடு, லிப்ட் உள்ளிட்ட பொருட்கள், அறைகள் மாயமாகி வருவதோடு, சமூக விரோத செயல்கள் அரங்கேறும் மையமாகவும் மாறியுள்ளது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட்டில் நிலவும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புதிதாக கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.

புதிதாக பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல பொதுமக்கள், பைபாஸ் ரோடு, பழநி ரோடு, ராஜேந்திரா ரோடு, பொள்ளாச்சி ரோடு சந்திப்பு ரவுண்டானாவை கடக்க வேண்டியுள்ளது. இதனால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ரோட்டை கடக்கும் போது, வாகன போக்குவரத்து நிறுத்த வேண்டியுள்ளது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் நிரந்தரமாகியுள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில், தற்போது பயன்படுத்தாமல் வீணாக உள்ள நடை மேம்பாலத்தை, இரு பஸ் ஸ்டாண்ட்களையும் இணைக்கும் வகையில், மாற்றி அமைக்க நகராட்சி திட்டமிட்டு, அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அத்திட்டமும், ஒரு ஆண்டுக்கு மேலாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே, அரசு நிதியில் கட்டப்பட்டு, வீணாக உள்ள நடை மேம் பாலத்தை, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us