/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சேமிப்பு கணக்கு துவக்க படிவம் தேவையில்லை!
/
சேமிப்பு கணக்கு துவக்க படிவம் தேவையில்லை!
ADDED : மார் 22, 2025 06:50 AM
திருப்பூர்: திருப்பூர் கோட்டத்திலுள்ள அனைத்து தலைமை மற்றும் துணை தபால் அலுவலகங்களிலும்,இ-கே ஒய்.சி., முறையில் சேமிப்பு கணக்கு துவங்கும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
இது குறித்து, திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை:
தபால் அலுவலகங்களில், சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு துவக்குவோர், தங்கள் முகவரி சான்று, ஆதார் ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்கவேண்டியிருந்தது. காகித பயன்பாட்டை குறைக்கும்வகையில், தபால் அலுவலகங்களில், இ-கே.ஒய்.சி., முறையில் சேமிப்பு கணக்கு துவக்கம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, பயோ-மெட்ரிக் பதிவு செய்து, மிக சுலபமாக சேமிப்பு கணக்கு துவக்கலாம். இதன்மூலம், படிவங்கள் பூர்த்தி செய்வதற்காக நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை.
பயோமெட்ரிக் பதிவு செய்து, தங்கள் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும் முடியும். இதற்காக எந்த படிவத்தையும் பூர்த்தி செய்து கொடுக்கத்தேவையில்லை.
திருப்பூர் கோட்டத்திலுள்ள அனைத்து தலைமை மற்றும் துணை தபால் அலுவலகங்களிலும் இ- கே.ஒய்.சி., வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, அருகிலுள்ள தபால் அலுவலகங்களை அணுகலாம். www.indiapost.gov.in என்கிற இணைய தளத்தையும் பார்வையிடலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.