ADDED : ஏப் 13, 2026 10:30 PM
உடுமலை: உடுமலையில், பிரதான பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லாததால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
உடுமலை நகரில் பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, ராஜேந்திரா ரோடு, திருப்பூர் ரோடு, தளி ரோடு, கல்பனா ரோடு போன்ற முக்கிய ரோடுகள் உள்ளன. இதில், தளி ரோட்டில், நுாலகம், குட்டைத்திடல், நகராட்சி அலுவலகம், வணிக நிறுவனங்கள் உள்ளன.
இந்த ரோடு வழியாக, திருமூர்த்தி அணை, அமராவதி அணை, சின்னார், மூணார் பகுதிகளுக்கு, அரசு, தனியார் பஸ்களும், சுற்றுலா வாகனங்களும், கிராமங்களுக்கு டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இந்த ரோட்டில், பிரதான பஸ் நிறுத்தமாக யூனியன் ஆபீஸ் ஸ்டாப் உள்ளது. இதை தினமும் நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர், பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இங்கு இங்கு நிழற்கூரை இல்லாததால், பெண்கள், முதியோர், குழந்தைகள் திறந்த வெளியில், வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து பல முறை நகராட்சிக்கு புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
