ADDED : அக் 25, 2024 10:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம் வழியாக செல்லும் கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கோவை வழியாக கேரள மாநிலத்தை இணைக்கிறது. பல்லடம் -- கொச்சி நெடுஞ்சாலையும், பாலக்காடு வழியாக கேரளாவை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கொச்சி செல்லும் ரோடு பிரிகிறது. இவ்வழியாக வரும் வாகனங்கள், கோவை செல்ல எந்த வழித்தடத்தை பயன்படுத்துவது என்று தெரியாமல் குழப்பம் அடைகின்றனர்.
கொச்சி ரோடு பிரிவில், குழப்பத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள் பலர், வழி தெரியாமல் நடுரோட்டில் வாகனங்களை நிறுத்துவதும், வழி கேட்டு பொதுமக்களிடம் விசாரிப்பதுமான செயல்கள் அன்றாடம் நடந்து வருகின்றன. விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. கொச்சி ரோடு பிரிவில், வழிகாட்டி பலகை வைக்கப்பட வேண்டும்.