தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது! சி.இ.ஒ. உத்தரவு  

விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது! சி.இ.ஒ. உத்தரவு  

விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது! சி.இ.ஒ. உத்தரவு  


ADDED : செப் 25, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 06:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், செப். 26–

‘காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகத்தின் உத்தரவை மீறும் பள்ளிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் தெரிவித்தார்.

கடந்த 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் 9 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அக். 5-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறையின் உத்தரவுகளை மீறி செயல்படும் பள்ளிகளுக்கு, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பாவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை பாயும்

–––––––––––––––

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறியதாவது:

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்களின் உத்தரவு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.

மேலும், மழைக்காலம் தொடங்கியுள்ளதால், மாணவர்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகத்தின் உத்தரவை மீறும் பள்ளிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us