/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகையிலை வேண்டாம்; விழிப்புணர்வு ஊர்வலம்
/
புகையிலை வேண்டாம்; விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மே 31, 2025 05:27 AM

திருப்பூர்; பொன்னாபுரம் பகுதியில் புகையிலை பாதிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தாராபுரத்தில், சர்வதேச புகையிலை முன்னிட்டு பொன்னாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மருத்துவர் தேன்மொழி தலைமை வகித்து கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். தாராபுரம் அரசு மருத்துவமனை முன் துவங்கி, யூனியன் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக, பழைய நகராட்சி அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்று சேர்ந்தது.
இதில், மருத்துவ அலுவலர் பிலிப் பாஸ்கர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல், சுகாதார ஆய்வாளர்கள் நவீன், தனபால் மற்றும் சுகாதார களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் புகையிலை பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் புகையிலை எதிர்ப்பு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர்.