/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெ.கோவிலுடன் வேண்டாம்; புங்கத்துறை மக்கள் எதிர்ப்பு
/
வெ.கோவிலுடன் வேண்டாம்; புங்கத்துறை மக்கள் எதிர்ப்பு
வெ.கோவிலுடன் வேண்டாம்; புங்கத்துறை மக்கள் எதிர்ப்பு
வெ.கோவிலுடன் வேண்டாம்; புங்கத்துறை மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 22, 2025 12:23 AM

திருப்பூர்; தாராபுரம் தாலுகாவில் இருக்கும் தங்களை, புதிதாக உருவாகும் வெள்ளகோவில் தாலுகாவில் இணைக்கும் முடிவை கைவிட வேண்டுமென, புங்கந்துறை கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து, புங்கந்துறை கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு: புங்கந்துறை கிராமம், குண்டடம் ஒன்றியத்தில் உள்ளது; தாராபுரத்தில் இருந்து ஒன்றிய அலுவலகம், 15 கி.மீ., துாரத்தில் உள்ளது. வெள்ளகோவில் செல்ல வேண்டுமெனில், 39 கி.மீ., செல்ல வேண்டும். குண்டடம் சென்றுவர போக்குவரத்து வசதியும் சீராக இருக்கிறது. வெள்ளகோவில் தாலுகா உருவாகும்பட்சத்தில், அந்த தாலுகாவுடன் இணைப்பது பயனளிப்பதாக இருக்காது. எனவே, இந்த முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளை கேட்டபோது, 'வெள்ளகோவில் தாலுகா உருவாக்க, மாவட்ட நிர்வாகம் உத்தேச அறிக்கை மட்டும் சமர்ப்பித்துள்ளது; அதுவே இறுதியானதாக இருக்காது. கடந்தாண்டும், ஒரு அறிக்கை அளித்துள்ளோம். தாலுகா அமைவது உறுதியாகும் போது, மக்களின் விருப்பத்தை கேட்டு, உரிய மாறுதல்களுடன் அறிவிப்பு வெளியாகும்,' என்றனர்.