தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கண்காணிப்பு இல்லை; திருடர்களுக்கு 'சாதகம்'

கண்காணிப்பு இல்லை; திருடர்களுக்கு 'சாதகம்'

கண்காணிப்பு இல்லை; திருடர்களுக்கு 'சாதகம்'


ADDED : அக் 24, 2024 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்: தீபாவளி நெருங்குவதால், பல்லடம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைவீதி பகுதிகளில் வழக்கத்தைக் காட்டிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது.

பஸ் ஸ்டாண்ட் கூட்ட நெரிசலுடன் உள்ளது. இதை சாதமாக பயன்படுத்தும் சமூக விரோதிகள் சிலர், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

பஸ் ஸ்டாண்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், பெரும்பாலும் இங்குள்ள கடைகளை கண்காணிக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை கண்காணிக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

உயர் மின் விளக்கு நீண்ட நாட்களாக எரியாததால், பஸ் ஸ்டாண்டில் இருள் சூழ்கிறது. குற்ற சம்பவங்களை தடுப்பதற்காகவே இங்கு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், போதிய போலீசார் இல்லாததால், இது பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us