sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அன்னியர் நுழைய வழியில்லை அமைதி தவழும் இந்திரா நகர்

/

அன்னியர் நுழைய வழியில்லை அமைதி தவழும் இந்திரா நகர்

அன்னியர் நுழைய வழியில்லை அமைதி தவழும் இந்திரா நகர்

அன்னியர் நுழைய வழியில்லை அமைதி தவழும் இந்திரா நகர்


ADDED : ஜூன் 07, 2025 12:40 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாநகராட்சியில் 56வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது, இந்திரா நகர். மாநகரின் மையப்பகுதியாக உள்ள தாராபுரம் ரோட்டை ஒட்டி, அரசு மருத்துவ கல்லுாரிக்கு எதிர்புறம் அமைந்துள்ளது. பரபரப்பான பகுதிக்குள் அமைந்திருந்தாலும், குடியிருப்பு பகுதியில், அமைதி தவழ்கிறது.

சந்திராபுரம் ரோட்டிலிருந்து ஒரு பிரதான ரோடும், நான்கு குறுக்கு வீதிகளும் உள்ள இப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 1980 வாக்கில் மனையிடம் அமைக்கப்பட்டது. 1990 வாக்கில் தான் மெல்ல மெல்ல வீடுகள் கட்டப்பட்டு, உரிமையாளர்கள் இங்கு குடியேறத் துவங்கினர்.

மக்கள் குடியேறத் துவங்கியும், 30 ஆண்டு காலம் கழித்தே இப்பகுதியினர் தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்தும் எண்ணத்தை செயல்படுத்தினர். கடந்த 2021ல் இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் என்ற அமைப்பு உருவானது.

தலைவராக தளபதி சேகர்; செயலாளர் ராம்குமார், பொருளாளர் வேணுகோபால்; இணை செயலாளர் நாச்சிமுத்து ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். சங்கம் துவங்கப்பட்ட போது, அதன் தலைவர் வீட்டில் இயங்கி வந்தது.

சங்கப் பணிகள் தீவிரப்படுத்திய நிலையில் இதற்கென, குடியிருப்பு பகுதியின் நுழைவாயில் பகுதியிலேயே ஒரு அலுவலகம் வாடகை கட்டடத்தில் துவங்கப்பட்டு செயல்படுகிறது.

32 இடங்களில்கேமராக்கள்


சங்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது:

எங்கள் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்போருக்கு பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக சங்கம் துவங்கினோம். அதன் முயற்சியாக குடியிருப்பு பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 32 இடங்களில் அவை பொருத்தப்பட்டுள்ளன.

இதன் பதிவுகளை சங்க அலுவலகம் மற்றும் தலைவர் வீட்டில் நேரடியாக காணும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். இது தவிர நிர்வாகிகள் மொபைல் போனிலும் இதற்கான வசதி ஏற்படுத்தி, எந்த நேரமும் இப்பகுதி முழுமையாக கண்காணிப்பில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். இதனால் தேவையில்லாத பிரச்னைகள், சம்பந்தமில்லாத நபர்கள் நடமாட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சங்கம் சார்பில்சமூகப்பணிகள்


சங்கம் சார்பில் கண்சிகிச்சை முகாம் ஏற்பாடு செய்து, அதில் பல தரப்பினரும் பயன் பெற்றனர். எங்கள் சங்கத்தின் பெயரில் சங்கத்தின் சார்பில் மாதக் காலண்டர் அச்சிடப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் வழங்கியுள்ளோம்.

வெளியிடங்களிலும் எங்கள் நட்பு வட்டாரங்களுக்கு வழங்கியுள்ளோம். இது ஒரு புதுமையான முயற்சி என பலரும் பாராட்டினர்.

சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய பண்டிகைளை குடியிருப்பு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் வகையில் திட்டமிட்டுள்ளோம்.

குடிநீர், ரோடு வசதிகள்துாய்மைப்பணி சிறப்பு


குடிநீர் வினியோகம் வாரம் ஒரு முறை தேவையான அளவில் கிடைக்கிறது. இது தவிர இங்கு ஆழ்குழாய் அமைக்கப்பட்டு பொது குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதிலும் தேவையான அளவில் நீர் கிடைக்கிறது.

அதே போல் ரோடுகளும் அண்மையில் அமைக்கப்பட்டு நல் முறையில் உள்ளது. மேலும், குப்பை கழிவுகள் தினமும் தள்ளு வண்டியில் வந்து நேரடியாக வீடுகளில் சேகரிக்கும் பணிக்கு துாய்மைப் பணியாளர்கள் வருகின்றனர்.

தெருவிளக்குகள்கூடுதல் தேவை


எந்த குறை என்றாலும் சங்கம் சார்பில் உடனடியாக, கவுன்சிலர், மாநக ராட்சி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு பெறப்படுகிறது.எங்கள் பகுதிக்கு 23 தெரு விளக்குகள் தேவைப்படுகின்றன. தற்போது 12 விளக்குகள் மட்டுமே உள்ளன. இதை தேவையான அளவு எண்ணிக்கையில் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஒரே குடியிருப்பு...

3 ஓட்டுப்பதிவு மையங்கள்

எங்கள் பகுதி வாக்காளர்களுக்கு சந்திராபுரம் பள்ளியில் 214 மற்றும் 215 ஆகிய பூத்களில் ஓட்டுரிமை உள்ளது. புதிய வாக்காளர்கள் தற்போது, எண் 212 பூத்தில் இணைக்கப்படுகின்றனர். இது ஐ.டி.ஐ., மையத்தில் உள்ளது. அனைத்து வாக்காளர்களும் ஒரே மையத்தில் இணைக்கப்பட வேண்டும். இப்பகுதியினர் ஆரம்ப காலம் முதல், அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்புக்கு அங்குள்ள வழியாகச் சென்று வந்தனர். தற்போது அந்த வழியை, ஐ.டி,ஐ., நிர்வாகம் சுவர் வைத்து மறைத்து விட்டது. இதனால் நீண்ட துாரம் சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

- நிர்வாகிகள்,

இந்திரா நகர் குடியிருப்பாளர் நலச்சங்கம்.

பாதாளச்சாக்கடை வசதி வேண்டும்

''இந்திரா நகரில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படவில்லை. கழிவு நீர் வாய்க்கால் மட்டுமே இதற்கான தீர்வாக உள்ளது. இதில் சில சமயங்களில் குப்பை கழிவுகள் சேர்ந்து அடைப்பு ஏற்படும். முறையாக இதை சுத்தம் செய்ய வேண்டும்'' என்கின்றனர் குடியிருப்பாளர் சங்க நிர்வாகிகள்.






      Dinamalar
      Follow us