/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் நிலத்துக்கு என்.ஓ.சி.,: செயல் அலுவலர் 'சஸ்பெண்ட்'
/
கோவில் நிலத்துக்கு என்.ஓ.சி.,: செயல் அலுவலர் 'சஸ்பெண்ட்'
கோவில் நிலத்துக்கு என்.ஓ.சி.,: செயல் அலுவலர் 'சஸ்பெண்ட்'
கோவில் நிலத்துக்கு என்.ஓ.சி.,: செயல் அலுவலர் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 21, 2024 05:46 AM
திருப்பூர்: கோவில் நிலத்துக்கு தடையின்மை சான்று வழங்கிய செயல் அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களின் செயல் அலுவலராக இருந்தவர் சரவணபவன். கடந்த சில ஆண்டுகளாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில் நிலம் மீட்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான நிலத்துக்கு தடையின்மை சான்று வழங்கியதாக, செயல் அலுவலர் சரவணபவன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பக்தர்கள் சார்பில், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனரகத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. கோவில் நிலம் என்று கூறப்படும், 11 ஏக்கர் நிலத்துக்கு, தங்கள் பெயரில் ரயத்துவாரி பட்டா இருப்பதாக கூறி, செயல் அலுவலரை அணுகி, சிலர் தடையின்மை சான்று பெற்றது உறுதி செய்யப்பட்டது.
கோவில் நிலத்துக்கு எவ்வித சான்றிதழும் வழங்க கூடாது என்ற விதிமுறையை மீறி செயல்பட்டதால், செயல் அலுவலர் சரவணபவன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதுகுறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் (பொறுப்பு) ஹர்சினியிடம் கேட்டபோது,''கோவில் நிலத்துக்கு தடையின்மை சான்று வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், செயல் அலுவலர் சரவணபவன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். கோவில் அலுவலகத்தில் அலுவலர் மற்றும் பணியாளர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.