/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நியமன கவுன்சிலர் பதவி; மாற்றுத்திறனாளிகள் மனு
/
நியமன கவுன்சிலர் பதவி; மாற்றுத்திறனாளிகள் மனு
ADDED : ஜூலை 18, 2025 11:30 PM
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் நியமன கவுன்சிலர் பதவிக்கு, சக் ஷம் அமைப்பு சார்பில் இது வரை 5 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகளை நியமன கவுன்சிலராக பதவி வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் தலா ஒரு மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக நியமிக்க மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சியில், 'சக் ஷம்' அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.
இதில் சக்திவேல், ஜெயஸ்ரீ, குமார், சிவசுப்ரமணியம் மற்றும் சிவபாலன் ஆகிய ஐந்து பேர் இது வரை மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், தாராபுரம், பல்லடம், காங்கயம், உடுமலை, திருமுருகன் பூண்டி மற்றும் அவிநாசி நகராட்சிகளிலும், கொமரலிங்கம், குன்னத்துார் மற்றும் தளி பேரூராட்சிகளிலும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.