/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரபுசாரா மின் உற்பத்தி மானியம்: தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
/
மரபுசாரா மின் உற்பத்தி மானியம்: தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
மரபுசாரா மின் உற்பத்தி மானியம்: தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
மரபுசாரா மின் உற்பத்தி மானியம்: தொழில்துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 31, 2024 12:46 AM
திருப்பூர்;திருப்பூர் கிளஸ்டரில், புதுப்பிக்கப்பட்ட பசுமை ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது; காற்று மற்றும் சூரிய சக்தி மூலமாக எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. திருப்பூர் தொழில்துறையினர் பயன்படுத்தும் மின்சார அளவை காட்டிலும், நான்கு மடங்கு அதிகமாக, பசுமை எரிசக்தி உற்பத்திக்கு முதலீடு செய்துள்ளனர்.
திருப்பூர் பின்னலாடை தொழில்துறையில், பெரிய மற்றும் சிறிய தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றில், சிறிய நிறுவனங்கள், பெரும் முதலீடு செய்ய இயலாத நிலையில் உள்ளன. தற்போதைய மின்சார செலவு உயர்வுகளால், சிறிய நிறுவனங்கள் வழக்கமான உற்பத்தியை தொடர்வதிலும் பல்வேறு சவால் உள்ளது.
உண்மையை கருத்தில்கொண்டு, 2023-24 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தனியாக பசுமை சார் மின்சக்தி உற்பத்திக்கு நிதி ஒதுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், முதலீடுகளுக்கு ஏற்ப தகுந்த மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மற்றும் ஒட்டுமொத்த தொழில்துறையினரும் வலியுறுத்தி வருகின்றனர்.