ADDED : ஜன 15, 2026 06:32 AM

அ நிறம் | அளவு
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சி மற்றும் சமத்துவ பொங்கல் விழா பாண்டியன் நகரில் நடந்தது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி, கிரிக்கெட், கோகோ, மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. மாலையில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு பொதுமக்களுக்கு வழங்கினர்.
பரிசளிப்பு விழாவுக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ராம்தாஸ் முன்னிலை வகித்தார். வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் வரவேற்றார். அமைச்சர் சாமிநாதன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
