/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சம்பளத்தை வழங்க கேட்டு வட மாநில தொழிலாளர் புகார்
/
சம்பளத்தை வழங்க கேட்டு வட மாநில தொழிலாளர் புகார்
ADDED : நவ 17, 2024 04:52 AM
பல்லடம்: நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்றுத்தர வலியுறுத்தி, வட மாநில தொழிலாளர்கள் சிலர், பல்லடம் போலீசில் புகார் அளித்தனர்.
பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும், 20க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் சம்பளம் வரவில்லை என்றும், நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்றுத் தர வலியுறுத்தியும் புகார் அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், 'பீகார், ஒடிசா, உ.பி., உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நாங்கள், பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறோம். ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் எங்களுக்கான சம்பள பணம் வழங்கவில்லை. இது குறித்து நிர்வாகத்தில் கேட்டாலும் சரியான பதில் இல்லை.
ஒவ்வொரு மாதமும் ஊருக்கு பணம் அனுப்புவதுடன், வங்கி தவணை, கடன் உள்ளிட்டவற்றுக்கு செலுத்தியாக வேண்டும். இதுபோக, உணவு உள்ளிட்ட செலவுகளும் உள்ளன.
இவ்வாறு, சம்பளத்தை தாமதப்படுத்தினால் எவ்வாறு சமாளிப்பது என்றே தெரியவில்லை. எனவே, எங்களுக்கான சம்பளத்தை உடனே பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
வட மாநில தொழிலாளர்களின் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.