sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 5 மாதங்கள் ஊதியம் தராததால் வடமாநில தொழிலாளர்கள் மறியல்

/

 5 மாதங்கள் ஊதியம் தராததால் வடமாநில தொழிலாளர்கள் மறியல்

 5 மாதங்கள் ஊதியம் தராததால் வடமாநில தொழிலாளர்கள் மறியல்

 5 மாதங்கள் ஊதியம் தராததால் வடமாநில தொழிலாளர்கள் மறியல்

4


ADDED : ஜன 09, 2026 06:04 AM

Google News

ADDED : ஜன 09, 2026 06:04 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: ஐந்து மாதங்கள் ஊதியம் வழங்காத நிறுவனத்தை கண்டித்து, வட மாநில தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, 2018ல் துவங்கியது. மொத்தம், 160 கி.மீ., துாரம் சாலை, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. இரு ஆண்டுகளில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டது.

திண்டுக்கல் முதல் மடத்துக்குளம் வரையில், இரு பிரிவுகளில் டெண்டர் எடுத்த, இரண்டு நிறுவனங்கள், 2025ல் பணிகளை நிறைவு செய்த நிலையில், மடத்துக்குளம் முதல் பொள்ளாச்சி வரை டெண்டர் எடுத்த 'டி.பி.ஜெயின்' நிறுவனம் பணியை ஆமை வேகத்தில் நகர்த்தி வந்தது.

ஏழு ஆண்டுகளாக, நான்கு வழிச்சாலை இழுபறியாகி வந்த நிலையில், ஐந்து மாதங்களாக பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொழிலாளர்களுக்கு ஊதியமும் வழங்கவில்லை.

உணவிற்கு கூட பணமில்லாததால், உடனடியாக ஊதியம் வழங்கக் கோரி, கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அந்தியூர் பகுதியில், நேற்று, வட மாநில தொழிலாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடுமலை, கோமங்கலம் போலீசார், தொழிலாளர்கள், மேலாளர் சண்முகராவ் ஆகியோரிடம் பேச்சு நடத்தினர். இதில், உடனடியாக ஊதியம் வழங்கப்படும் என நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து, தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us