ADDED : நவ 03, 2024 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூரில் வசிக்கும் வடமாநில மக்கள், இரண்டாம் நாள் தீபாவளியை கொண்டாடினர்.
தொழில் நிமித்தமாக திருப்பூர் வந்த, வடமாநிலத்தவர், 30 ஆண்டுகளாக திருப்பூரில் வசிக்கின்றனர். பனியன் தொழிலில், எலக்ட்ரிக்கல்ஸ், உலர் பழங்கள் விற்பனை, சாக்லெட் கடைகள், பேக்கரிகள் என, பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர்.
அமாவாசையுடன் வரும் தீபாவளி பண்டிகையை ஒரே நாளில் கொண்டாடுகின்றனர். அமாவாசைக்கு முன்பாக வரும் தீபாவளி வரும் ஆண்டில், தொடர்ந்து இரண்டு நாட்கள் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
அவ்வகையில், வடமாநில மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வைத்தும், புத்தாடை அணிந்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடினர்.
- நமது நிருபர் -