/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதிய பஸ்கள் இல்லை; கிராம மக்கள் தவிப்பு
/
போதிய பஸ்கள் இல்லை; கிராம மக்கள் தவிப்பு
ADDED : டிச 20, 2024 08:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையிலிருந்து, பல கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால், மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து நகரங்களுக்கு புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
இதனால், மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். குறைந்த அளவில் செல்லும், டவுன்பஸ்களில் மக்கள் நின்று கொண்டும், தொங்கிக்கொண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

