/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாட்டிங் உரிமையாளர் சங்கம் கூலியை உயர்த்தி அறிவிப்பு
/
நாட்டிங் உரிமையாளர் சங்கம் கூலியை உயர்த்தி அறிவிப்பு
நாட்டிங் உரிமையாளர் சங்கம் கூலியை உயர்த்தி அறிவிப்பு
நாட்டிங் உரிமையாளர் சங்கம் கூலியை உயர்த்தி அறிவிப்பு
ADDED : ஜூலை 22, 2025 11:08 PM

அவிநாசி; அவிநாசி அருகேயுள்ள தெக்கலுாரில், அவிநாசி நாட்டிங் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் அவிநாசி, தெக்கலுார், புதுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நாட்டிங் உரிமையாளர்கள், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்துக்கு, நாட்டிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கதிரேசன், மருதாசலம், செயலாளர் யோகேஸ்வரர், துணைச் செயலாளர்கள் சந்தோஷ், சதீஷ்குமார், பொருளாளர் கார்த்திக், துணைப் பொருளாளர்கள் சரவணகுமார், சிவசங்கர், ரமேஷ், தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
பொதுக்குழு கூட்டத்தில், ஜூலை 1ம் தேதி முதல் சங்கத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விலை பட்டியல் படி கூலி வாங்குவது, புதிய பட்டியல்படி கூலி தரும் வரை, 30ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்வது, வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடுவது, ஏற்கனவே அடிப்படை கூலியிலிருந்து குறைக்கப்பட்ட பழைய கூலி, தற்போது வாங்கப்படும் புதிய கூலியையும் சேர்த்து வாங்குவது என்பது உட்பட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு, உதவி ஒருங்கிணைப்பாளர் மகேஷ்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.