/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் கரை மேம்பாடு திட்டப்பணிகள் வேகம்
/
நொய்யல் கரை மேம்பாடு திட்டப்பணிகள் வேகம்
ADDED : பிப் 16, 2024 12:52 AM
திருப்பூர்;திருப்பூர் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், திருப்பூரில், நொய்யல் கரை மேம்பாடு திட்டப்பணிகள் வேகமெடுத்துள்ளன.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் நொய்யல் கரை மேம்படுத்தும் திட்டம் பிரதான திட்டமாக நடந்து வருகிறது. இத்திட்டத்தில் நொய்யல் ஆற்றின் இரு கரையிலும் அணைப்பாளையம் முதல் மணியகாரம்பாளையம் வரையில் ரோடு அமைக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் ஒரு சில இடங்களில் சிறுபாலம் அமைத்தல், மழை நீர் வடிகாலுக்கு பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் காரணமாக ரோடு அமைக்கும் பணியில் தாமதம் நிலவுகிறது. அதேபோல், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமையும் இடங்களிலும் பணிகள் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மெதுவாக நடந்தது.
தற்போது மழையும் நின்று, ஆற்றில் நீர் வரத்தும் குறைந்த நிலையில், இக்காரணங்களால் தடைப்பட்ட பணிகள் தற்போது துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், அணைப்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம், ஆலங்காடு, சாயப்பட்டறை வீதி ஆகிய பகுதிகளில் நடைபெறும் பணிகளை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், மாநகர பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதேபோல், நடராஜா தியேட்டர் பகுதியில் நொய்யல் கரையை ஒட்டி அமைக்கப்படும் ரோடு பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.