/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் கரை ரோடு... பல்லிளிக்குது பாரு!
/
நொய்யல் கரை ரோடு... பல்லிளிக்குது பாரு!
ADDED : ஜன 20, 2025 06:46 AM

திருப்பூர், : நொய்யல் கரையை ஒட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரோடு பல இடங்களில் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது.
திருப்பூர் நகரில் நொய்யல் கரையை ஒட்டி இரு புறங்களிலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆற்றின் கரைகள் மேம்படுத்தி, பொழுது போக்கு அம்சங்கள், சிறுவர் பூங்கா, நடைப் பயிற்சி தளம் உள்ளிட்டவை அமைக்கும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது.
இதில், ஆற்றின் இரு கரைகளிலும், வாகனங்கள் சென்று வர வசதியாக தார் ரோடும் அமைக்கப்படுகிறது.
அவ்வகையில், வளம் பாலம் முதல் மணியகாரம்பாளையம் பாலம் வரையில் ரோடு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரமற்ற பணிகள் நடப்பதால், பல இடங்களில் தார் ரோடு ஜல்லியுடன் பெயர்ந்து சேதமடைந்து வருகிறது. அதிகளவில் வாகனங்கள் செல்லும்போதும், மழை பெய்யும்போதும், இது மேலும் சேதம் ஆகும் நிலை உள்ளது. எனவே, தார் ரோடு உரிய தரத்துடன் அமைக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணித்து, ஒப்பந்ததாரரை எச்சரிக்க வேண்டும்.