தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேகமெடுக்கும் நொய்யல் புனரமைப்பு பணி

வேகமெடுக்கும் நொய்யல் புனரமைப்பு பணி

வேகமெடுக்கும் நொய்யல் புனரமைப்பு பணி

1


UPDATED : ஆக 08, 2026 09:02 PM

ADDED : ஆக 08, 2026 07:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 09:02 PM ADDED : ஆக 08, 2026 07:30 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட எல்லையான சாமளாபுரம் முதல் மங்கலம் வரை 15 கி.மீ. தொலைவிலான நொய்யல் ஆற்றை துாய்மைப்படுத்தும் பணியை உதயம் பவுண்டேஷன் மேற்கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை வழிகாட்டுதலுடன் மேற்கு ரோட்டரி அறக்கட்டளை மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக இப்பணி நடைபெறுகிறது.

கடந்த 3-ம் தேதி மங்கலத்தில் தொடங்கிய பணிகள் மூலம் பொக்லைன் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரங்கள் கொண்டு ஆகாயத்தாமரை, சீமைக்கருவேல புதர்கள் அகற்றப்பட்டு துார்வாரும் பணிகளும், கரைகளைப் பலப்படுத்தும் பணிகளும் விரைவாக நடந்து வருகின்றன. தற்போது மங்கலம் முதல் நல்லம்மன் தடுப்பணை வரை பணிகள் நிறைவடைந்துள்ளன.

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பணிகளை விரைந்து முடிக்க சாமளாபுரத்தில் இருந்தும் உதயம் பவுண்டேஷனின் மற்றொரு குழு சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்குகிறது.

நொய்யல் ஆறு துார்வாரும் பணி நடக்கிறது.

இடம்: மங்கலம்.

நாட்டு மரக்கன்றுகள் நடப்படும் நீர்வழிப்பாதை மற்றும் அணைக்கட்டுகளுக்குப் பாதிப்பில்லாத வகையில் நொய்யல் சீரமைக்கப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நொய்யல் கரைகளில் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்படும் 10 அடி உயரமுள்ள நாட்டு மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்படவுள்ளது - ரகுபதி, தலைவர், உதயம் பவுண்டேஷன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us