/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் ரோடு இனி ஒளிரும்! மக்களுக்கு தொல்லை அகலும்
/
நொய்யல் ரோடு இனி ஒளிரும்! மக்களுக்கு தொல்லை அகலும்
நொய்யல் ரோடு இனி ஒளிரும்! மக்களுக்கு தொல்லை அகலும்
நொய்யல் ரோடு இனி ஒளிரும்! மக்களுக்கு தொல்லை அகலும்
ADDED : ஜூன் 01, 2025 07:21 AM

திருப்பூர் : நொய்யல் கரையில் புதிய ரோடு அமைந்துள்ள பகுதியில் தெரு விளக்குகள் அமைக்கும் பணி துவங்கியது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வகையில் நொய்யல் ஆற்றின் இரு பகுதியிலும், அணைமேடு முதல் காசிபாளையம் பாலம் வரை பாதை அமைக்கப்பட்டு, ரோடு, சிறுபாலம் ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதில் ராயபுரம் பகுதியில் நொய்யல் கரையில் தார் ரோடு அமைக்கும் பணி அண்மையில் முடிவடைந்தது. அதையடுத்து, ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்டாமல் தடுக்கும் வகையில் கம்பி வேலி அமைக்கப்பட்டது.
தற்போது இந்த ரோட்டில் தெரு விளக்குகள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக, மின் ஒயர்கள் தரையில் பதிக்கப்பட்டது. தற்போது தெரு விளக்குகள் தாங்கி நிற்கும் கம்பங்கள் பதிக்கும் பணி நடக்கிறது.
இப்பணி முடிந்து விளக்குகள் பொருத்திய பின் மின் இணைப்பு வழங்கி, இந்த ரோடு பளிச்சென ஒளி வீசும்.