/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணி யில் ஈடுபட்ட என்.எஸ்.எஸ்., மாணவர்கள்
/
துாய்மை பணி யில் ஈடுபட்ட என்.எஸ்.எஸ்., மாணவர்கள்
ADDED : செப் 20, 2024 05:34 AM

திருப்பூர் : மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம், செப்., 17 முதல் அக்டோபர்., 2ம் தேதி வரை அரசு துறை சார்ந்த இடங்களில்,'துாய்மையே சேவை' திட்டத்தின் கீழ், துாய்மை பணியில் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் ஈடுபட அறிவுறுத்தியது.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - -2 மாணவர்கள் கல்லுாரி வளாகத்தில் தேங்கியிருந்த, பிளாஸ்டிக் பொருட்களை நேற்று அகற்றினர். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், அலகு - -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஆகியோர், துாய்மையின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து, 82 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை, மறுசுழற்சிக்காக, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.