/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழில் 80 -- ஆங்கிலத்தில் -100 தேர்ச்சி பெறாதவர் எண்ணிக்கை
/
தமிழில் 80 -- ஆங்கிலத்தில் -100 தேர்ச்சி பெறாதவர் எண்ணிக்கை
தமிழில் 80 -- ஆங்கிலத்தில் -100 தேர்ச்சி பெறாதவர் எண்ணிக்கை
தமிழில் 80 -- ஆங்கிலத்தில் -100 தேர்ச்சி பெறாதவர் எண்ணிக்கை
ADDED : மே 09, 2025 05:48 AM
திருப்பூர்; பிளஸ் 2 தேர்ச்சி முடிவில், தமிழில் 80 -- ஆங்கிலத்தில் 100 பேர் தேர்ச்சி பெறவில்லை.
மாவட்டத்தில் கணக்குபதிவியல் தேர்வை 11 ஆயிரத்து, 227 பேர் எழுதினர்; இவர்களில், 11 ஆயிரத்து, 68 பேர் தேர்ச்சி பெற்றனர். 159 பேர் தேர்ச்சி பெறவில்லை. மாணவர்களில், 92 பேரும், மாணவியரில், 67 பேரும் தேர்ச்சியடையவில்லை.
குறைந்தபட்சமாக விலங்கியல் தேர்வில், நான்கு பேர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. தேர்வெழுதிய, 381 பேரில், 377 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 265 மாணவிகளில் ஒருவர் மட்டும் தேர்வாகவில்லை. 116 மாணவர்களில், மூவர் தேர்வாகவில்லை.
தமிழில் 80 பேர்
தமிழ் பாடத்தில், 80 மற்றும் ஆங்கிலத்தில், 100 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இயற்பியல் - 90, வேதியியல் - 103, உயிரியல் - 29, கணிதம் - 73, வரலாறு - 37, பொருளியல் - 52 வணிகவியல் - 89, தாவரவியல் - 6, புள்ளியியல் - 6, கணினி அறிவியல் - 9 பேர் தேர்ச்சி பெறவில்லை.
புவியியல் - 268, நுண்ணுயிரியல் - 32, உயிர் வேதியியல் - 14, நர்சிங் - 74, ஊட்டச்சத்தியல் - 35, தொடர்பு ஆங்கிலம் - 1, ேஹாம் சயின்ஸ் - 85, அரசியல் அறிவியல் - 24 சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்) - 31 ஆகிய பாடங்களில் தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

