/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எண்ணும் எழுத்தும் கற்பித்தல் திட்டம்; ஆசிரியர்களுக்கு பயிற்சி
/
எண்ணும் எழுத்தும் கற்பித்தல் திட்டம்; ஆசிரியர்களுக்கு பயிற்சி
எண்ணும் எழுத்தும் கற்பித்தல் திட்டம்; ஆசிரியர்களுக்கு பயிற்சி
எண்ணும் எழுத்தும் கற்பித்தல் திட்டம்; ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 29, 2024 09:01 PM

உடுமலை: உடுமலை வட்டாரத்தில், எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்துக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
அரசுப்பள்ளிகளில் இரண்டாம் பருவத்துக்கான வகுப்புகள் துவங்கின. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் முறையில் கற்பித்தல் நடக்கிறது.
ஒவ்வொரு பருவம் தோறும் எண்ணும் எழுத்தும் பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது உடுமலை வட்டாரத்தில் எண்ணும் எழுத்தும் கற்பித்தல் திட்டத்துக்கான பயிற்சி வகுப்பு இரண்டு நாட்கள் நடந்தது.
இப்பயிற்சி போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பழனியாண்டவர் மில்ஸ் நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடந்தது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள், தற்போது வட்டார அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.