/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுங்கு விற்பனை ஜோர் :வெயில் தாக்கம் அதிகரிப்பு
/
நுங்கு விற்பனை ஜோர் :வெயில் தாக்கம் அதிகரிப்பு
ADDED : பிப் 13, 2024 11:10 PM
உடுமலை:வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், வெப்பத்தால் நிலவும் உஷ்ணத்தை குறைக்கும் வகையில், நுங்கு மற்றும் பதநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது.
உடுமலையில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே, பகல் நேரத்தில், வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இதனால், பலரும், பகலில் வெளியில் செல்வதை பெருமளவு தவிர்த்து வருகின்றனர்.
அதேநேரம், வெப்பத்தை தணிப்பதற்காக, பலரும் குளிர்ச்சியான நீராகாரம் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது, நகரில், தர்பூசணி, வெள்ளரிக்காய், பதநீர், நுங்கு, இளநீர் உள்ளிட்ட பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.
நகருக்குள் நெருக்கடி இருப்பதால், புறநகர் பகுதியான நெடுஞ்சாலையோரம் கடை அமைத்தும், சிலர் வியாபாரம் செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு என முக்கிய வழித்தடங்களில், மரத்தடி நிழல்களில் பதநீர் மற்றும் நுங்கு வியாபாரம் அதிகரித்துள்ளது.
ஒதுக்குபுறமான பகுதி என்பதால், வாகனங்களில் வருவோர், பதநீர் மற்றும் இளம் பனை நுங்குகளை வாங்கி உட்கொண்டு, உஷ்ணத்தை தணித்தும் வருகின்றனர்.

