/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதியோர் இல்லம் - பெண்கள் விடுதி; பதிவு செய்ய நவ., 20 வரை அவகாசம்
/
முதியோர் இல்லம் - பெண்கள் விடுதி; பதிவு செய்ய நவ., 20 வரை அவகாசம்
முதியோர் இல்லம் - பெண்கள் விடுதி; பதிவு செய்ய நவ., 20 வரை அவகாசம்
முதியோர் இல்லம் - பெண்கள் விடுதி; பதிவு செய்ய நவ., 20 வரை அவகாசம்
ADDED : அக் 23, 2024 06:27 AM
திருப்பூர் : முதியோர் இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள், வரும் நவம்பர் 20ம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் முதியோர் இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள், சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யாமல் செயல்படும் விடுதிகள், இணையதளம் வாயிலாக அல்லதுசமூக நலத்துறை அலுவலகத்தில் ஒரு மாதகால அவகாசத்துக்குள் அதாவது வரும் நவ., 20ம் தேதிக்குள் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முதியோர் இல்லங்கள், https://www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in/ என்கிற தளத்திலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், https://tnswp.com என்கிற தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளம், அறை எண் 35ல் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.
பதிவு செய்யாததனியார் விடுதிகளின் நிர்வாகிகள், மேலாளர்கள் மீது சட்ட பிரிவு 20 மற்றும் உட்பிரிவு 2 ன்படி, போலீசில் வழக்கு பதிவு செய்து, 2 ஆண்டுகள்சிறை அல்லது 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; பதிவு செய்யாத இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும்.
இவ்வாறு தெரி வித்துள்ளார்.