/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அனைவருக்கும் ஊட்டச்சத்து அதுவே வாழ்க்கைச்சொத்து'
/
'அனைவருக்கும் ஊட்டச்சத்து அதுவே வாழ்க்கைச்சொத்து'
ADDED : மார் 12, 2024 11:37 PM

திருப்பூர்:சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில், 'போஷன் பக்வாடா - 2024' நிகழ்ச்சி, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கிவைத்தார்.
ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு, உள்ளூர் உணவு முறைகள், பச்சிளம் குழந்தைகளுக்கு உணவூட்டும் முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், சிறுதானியங்களில் பல்வேறு சத்துணவு வகைகள் தயாரிக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டது.
ஊட்டச்சத்து குறைபாடு; ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்குவது; குழந்தை வளர்ப்பு, தாய்ப்பாலின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கும் கட்டமைப்புகள் இடம்பெற்றன. கழுத்து மற்றும் காதுகளில், காய்கறிகளையே அணிகலன்களாக அணிந்து வந்து,அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்; நடனமாடி அசத்தினர்.
தொடர்ந்து, ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒப்புக்கு ஓர் ஊர்வலம் நடத்தப்பட்டது. கலெக்டர் அலுவலக போர்டிகோவில் துவங்கிய ஊர்வலம், வளாகத்துக்குள் 50 மீட்டர் துாரம் சென்று திரும்பியது.

