ADDED : ஏப் 18, 2025 07:02 AM

திருப்பூர்;தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர்கள் 80 பேர், சங்க கோடியுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணை 95 ஐ ரத்து செய்யவேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ஒன்பதாயிரம் ரூபாய் வழங்கவேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, பணிக்கொடையாக 5 லட்சம் ரூபாய் வழங்கவேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சத்துணவு பணியாளர் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை, சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்தவேண்டும் என, கோஷங்கள் எழுப்பினர்.