ADDED : செப் 02, 2026 06:44 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:நீதிமன்ற
தீர்ப்பின் படி ஓய்வூதியம் வழங்க கோரி, சத்துணவு ஊழியர்கள் நேற்று
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் சுஜாதா
தலைமை தாங்கினார்.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில்,
7,850 ரூபாய் ஓய்வூதியமாக வழங்க, 110 விதியின் கீழ் உத்தரவிட
வலியுறுத்தினர். சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஜெயந்தி, பத்மா
உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
