/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'என்வி லேண்ட்ஸ் - என்விஸ்டா' வீட்டுமனை விற்பனை துவக்கம்
/
'என்வி லேண்ட்ஸ் - என்விஸ்டா' வீட்டுமனை விற்பனை துவக்கம்
'என்வி லேண்ட்ஸ் - என்விஸ்டா' வீட்டுமனை விற்பனை துவக்கம்
'என்வி லேண்ட்ஸ் - என்விஸ்டா' வீட்டுமனை விற்பனை துவக்கம்
ADDED : ஜன 27, 2025 12:23 AM

திருப்பூர்; புதிய திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடைப்பூங்கா அருகில், 'என்வி லேண்ட்ஸ் - என்விஸ்டா' (NV LANDS -ENVISTA) வீட்டு மனைகள் விற்பனை துவக்க விழா நேற்று நடந்தது.
தமிழகம் முழுதும், பல வீட்டு மனைகளை நிறுவி 'என்வி லேண்ட்ஸ்' நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. திருப்பூரில் லட்சுமி நகர் பேஸ் -1 மற்றும் பேஸ் -2 என்ற பெயரில் வீட்டு மனைகளை ஏற்படுத்தி முழுவதுமாக விற்றுள்ளனர். தற்போது, நியூ திருப்பூரில் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா அருகில், விசாலமான சாலை, குடிநீர், நீச்சல்குளம், பூங்கா, விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சிக்கூடம், யோகா மையம், நடைபயிற்சி வளாகம், புத்துணர்வு மையம், பார்பிகியூ, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை உலகத்தரத்தில் நிறுவி 'என்வி லேண்ட்ஸ் - என்விஸ்டா' என்ற பெயரில் வீட்டு மனைகளை உருவாக்கியுள்ளனர். நேற்று வீட்டுமனைகள் விற்பனை துவக்க விழா நடந்தது. பிரேம் துரை தலைமை தாங்கி விற்பனையைத் துவக்கிவைத்தார். ஸினிமா (zinema) மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சத்யபிரகாஷ், அல்ட்ராமேக்ஸ் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் ராம்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
என்வி லேண்ட்ஸ் நிறுவன நிர்வாகி அன்பழகன் கூறுகையில், ''தரம் ஒன்றே தாரக மந்திரமாகச் செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனம் தமிழகம் முழுவதும் அனைத்து வசதிகளுடன் அமைதியான சூழலில் உலகத்தரத்திலான வீட்டு மனைகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்'' என்றார். மேலும் விவரங்களுக்கு: 080 35 233 969.