ADDED : நவ 02, 2024 11:11 PM

திருப்பூர்: கிறிஸ்தவர்கள், நேற்று கல்லறை தினம் அனுசரித்தனர். கிறிஸ்தவர்களின் வாழ்வியலில், தங்கள் குடும்பத்தில் இறந்த உறவினர்களின் ஆத்மா இறைவன் திருவடியில், சமாதானம் பெற்று இளைப்பாற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, ஆண்டுதோறும், நவ.2ல், கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாள், 'சகல ஆத்மாக்களின் தினம்' எனவும் அழைக்கப்படுகிறது.
நேற்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கல்லறை தோட்டங்களில், தேவாலய குருக்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களில் மறைந்து போனவர் களின் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர் சூட்டி, மெழுகுவர்த்தி ஏந்தி, மனதுருகி அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிற்காக பிரார்த்தனை செய்தனர். குடும்பமாக வீடுகளில் கூடி பிரார்த்தனை ஏறெடுத்தனர்.
n திருப்பூர், குமார் நகர் புனித ஜோசப் தேவாலயம், புனித கேத்ரீனம்மாள் தேவாலயம், அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள புனித தாமஸ் தேவாலயம், சேவூர் லுார்து அன்னை தேவாலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., தேவாலயங் களிலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.