/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகப்பேறு ஆலோசனை நாளை மருத்துவ முகாம்
/
மகப்பேறு ஆலோசனை நாளை மருத்துவ முகாம்
ADDED : செப் 20, 2024 10:52 PM
திருப்பூர் : அவிநாசி, முத்துசெட்டிபாளையம் மெயின் ரோட்டில், மாதேஸ்வரி மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது.
நாளை (22ம் தேதி) காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை மாதேஸ்வரி மருத்துவமனை வளாகத்தில், மகப்பேறு, கருத்தரிப்பு மற்றும் மகளிர் நல ஆலோசனை முகாம் நடக்கிறது.
முகாமில், சிறப்பு மருத்துவர் சூர்யபிரபா பங்கேற்று, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னை, வெள்ளைப்படுதல், கருப்பை வாய் புற்றுநோய், அதிக ரத்த போக்கு, கர்ப்பப்பை கட்டி, குழந்தையின்மை, கர்ப்பப்பை இறக்கம், கருமுட்டை நீர்க்கட்டி, நீண்ட கால அடிவயிற்றுவலி, மார்பக பரிசோதனை, கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் காப்பர்- டி, கருப்பை நீக்கிய பின் தொடர் சிகிச்சை பெறுவது உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்குகிறார்.
முகாமுக்கு பதிவு கட்டணம், 200 ரூபாய். 2,300 ரூபாய் மதிப்புள்ள அனைத்து பரிசோதனைகளும் இலவசம். முகாமில் சர்க்கரை, ரத்த அணுக்கள், சிறுநீர், தைராய்டு, கருப்பை வாய் புற்றுநோய், கால் மதமதப்பு, கால்சியம் பரிசோதனை செய்யப்படும். கருவுறுதல் ஆலோசனையும் வழங்கப்படும்.
விபரங்களுக்கு 99769 38123 என்ற எண்ணில் அழைக்கலாம் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.