/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; பயணியர் அவதி
/
பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; பயணியர் அவதி
ADDED : ஜூன் 10, 2025 09:31 PM

உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்ட், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளதால், பயணியர் பாதிக்கின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து, 300க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் நிலையில், இருக்கை வசதி, குடிநீர், கழிப்பிடம் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
இந்நிலையில், ஐந்து வழித்தடங்கள் உள்ள பஸ் ஸ்டாண்டிற்குள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், விதிமீறி அதிகளவு வருவதோடு, அவுட்போலீஸ் ஸ்டேஷன், பஸ்கள் நிற்கும் பகுதியில் நிறுத்தப்படுகின்றன.
மேலும், பஸ் ஸ்டாண்டில், ஏராளமான தள்ளுவண்டி கடைகளும் அமைக்கப்பட்டுள்ளதால், பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் மற்றும் பயணியர் வந்து செல்வதில், கடும் சிரமம் ஏற்படுவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே, போலீசார் பஸ் ஸ்டாண்டிற்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.