தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆரம்பிக்கும் முன்னரே ஆக்கிரமிப்பு 

 ஆரம்பிக்கும் முன்னரே ஆக்கிரமிப்பு 

 ஆரம்பிக்கும் முன்னரே ஆக்கிரமிப்பு 


ADDED : மார் 06, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 04:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர், யூனியன் மில் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தியேட்டர் வளாகம் ரோடு பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட பகுதி யூனியன் மில் ரோடு. ஊத்துக்குளி ரோட்டையும், காங்கயம் ரோட்டையும் இணைக்கும் முக்கியமான ரோடாக இது அமைந்துள்ளது. குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பல்வேறு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என பல தரப்பட்ட கட்டடங்கள் அதிகம் உள்ளன. எந்நேரமும் வாகனப் போக்குவரத்து அதிகளவில் காணப்படும் பகுதியாக இந்த ரோடு உள்ளது.

இந்த ரோட்டில் தற்போது புதிதாக ஒரு மல்டி பிளக்ஸ் தியேட்டர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணி நிறைவடைந்த நிலையில் கட்டடம் மட்டும் திறப்பு விழா நடந்தது. தியேட்டர் அமைப்புக்கான உட்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தியேட்டர் வளாகத்தின் முன்புறம் ரோட்டில் சில அடி துாரம் வரை ஆக்கிரமித்து தியேட்டர் நிர்வாகம் தளம் அமைத்துள்ளது. ரோட்டில் அரையடி உயரத்துக்கு மேடை போன்ற அமைப்பை ஏற்படுத்தி பொது வழி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், 'யூனியன் மில் ரோட்டில், புதியதாக துவக்கப்பட்டுள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர் நிர்வாகத்தினர், மாநகராட்சி கான்கிரீட் ரோட்டை ஆக்கிரமித்து பிளாட்பார்ம் கட்டியுள்ளனர். இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படும். அடுத்தடுத்த கட்டட உரிமையாளர்களும் இது போல் தங்கள் வளாகத்துக்கு முன் ஆக்கிரமிப்பு செய்தால் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய கண்காணிப்பு நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us