தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஓ.இ., மில் உரிமையாளர்கள் உண்ணாவிரதம்

 ஓ.இ., மில் உரிமையாளர்கள் உண்ணாவிரதம்

 ஓ.இ., மில் உரிமையாளர்கள் உண்ணாவிரதம்


ADDED : பிப் 21, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்: திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் உள்ள 'ஓபன் எண்ட் ஸ்பின்னிங்' எனப்படும் 'ஓ.இ., மில்' உரிமையாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இதில், நாடா இல்லா தறி நெசவாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து, மாநில தலைவர் ஜெயபால் கூறுகையில், ''கழிவு பஞ்சு சார்ந்த தொழிற்சாலைகள் அதிகம் இருப்பது, தமிழகத்தில் தான். மின் கட்டணம், தொழிலாளர் கூலி, இதர கட்டணங்கள், 200 சதவீதம் உயர்ந்தும், கழிவு பஞ்சில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நுாலை, 145 ரூபாய்க்கு மேல் விற்க முடிவதில்லை.

''மேலும், தமிழகத்தில் மட்டும் பேக்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து மூலப்பொருளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

''எனவே, கழிவு பஞ்சை டெண்டர் அடிப்படையில் அரசு வழங்க வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us