UPDATED : நவ 25, 2026 09:46 PM
ADDED : நவ 25, 2026 09:46 PM
திருப்பூர்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த ஆட்சிமொழி பயிலரங்கில் பங்கேற்ற அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, கலெக்டர் முத்துக்குமரன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
நடப்பு நிதியாண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். 2 நாள் நாட்கள் நடந்த பயிலரங்கில், ஆட்சிமொழி வரலாறு, சட்டம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழி செயலாக்கம், அரசாணைகள் மற்றும் ஆட்சிமொழி ஆய்வு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிலரங்கின் நிறைவு நாளான நேற்று, பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் முத்துக்குமரன் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள், அகவை முதிர்ந்த தமிழறிஞர் மனோகரன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
