/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் திறந்து வைத்த வகுப்பறை திறக்காமல் அதிகாரிகள் மெத்தனம்
/
முதல்வர் திறந்து வைத்த வகுப்பறை திறக்காமல் அதிகாரிகள் மெத்தனம்
முதல்வர் திறந்து வைத்த வகுப்பறை திறக்காமல் அதிகாரிகள் மெத்தனம்
முதல்வர் திறந்து வைத்த வகுப்பறை திறக்காமல் அதிகாரிகள் மெத்தனம்
ADDED : மார் 13, 2026 05:46 AM

அனுப்பர்பாளையம்: திருப்பூர், சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனி மாநகராட்சி துவக்கப்பள்ளியில், பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநில நிதி குழு மூலம் ஒரு கோடியே, 80 லட்சம் ரூபாய் நிதியில், கீழ் தளத்தில் ஐந்து வகுப்பறை மற்றும் முதல் தளத்தில் ஐந்து வகுப்பறை என மொத்தம் 10 வகுப்பறை கட்டப்பட்டது.
புதிய கூடுதல் வகுப்பறையை கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம் மாநகராட்சி தரப்பில் சுத்தம் செய்து கொடுக்கப்படாமலும், தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படாமலும் உள்ளது. வகுப்பறை திறக்கப் பட்டும் பயன்படுத்தமுடியாமல் உள்ளது.
இதனால் மாணவர்கள் நெருக்கடியில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, முதல்வர் திறந்து வைத்த பள்ளி வகுப்பறை கட்டடத்தில் மாணவர்கள் பயன்பாட்டுக்கு அளிக்க உரிய நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக எடுக்க வேண்டும்.