/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்... பரபரப்பு துவங்கியாச்சு!ஓட்டுச்சாவடி வசதிகள் குறித்தும் ஆய்வு
/
தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்... பரபரப்பு துவங்கியாச்சு!ஓட்டுச்சாவடி வசதிகள் குறித்தும் ஆய்வு
தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்... பரபரப்பு துவங்கியாச்சு!ஓட்டுச்சாவடி வசதிகள் குறித்தும் ஆய்வு
தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்... பரபரப்பு துவங்கியாச்சு!ஓட்டுச்சாவடி வசதிகள் குறித்தும் ஆய்வு
ADDED : மார் 21, 2024 11:03 AM
உடுமலை:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் அடங்கியுள்ள, உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் தேர்தல் பணிகள், பறக்கும் படையினர் பணம் பறிமுதல் என தேர்தல் பரபரப்பு துவங்கியுள்ளது.
பொள்ளாச்சி லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், பிரதான கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அரசியல் கட்சியினர் பரபரப்படைந்துள்ள நிலையில், அதிகாரிகளும் தேர்தல் நடத்துவதற்கான பணிகள், தேர்தல் விதி மீறல் கண்காணிப்பு, வாகனச்சோதனையில் பணம் பறிமுதல் என சுறுசுறுப்படைந்துள்ளனர்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் அடங்கியுள்ள, உடுமலை சட்டசபை தொகுதியில், 127 ஓட்டுப்பதிவு மையங்களில், 294 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது பொள்ளாச்சி, சூளேஸ்வரன் பட்டியில், 1,500 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்ற அடிப்படையில், ஒரு ஓட்டுச்சாவடி கூடுதலாக அமைக்கப்பட்டு, மொத்தம், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 295 ஆக உயர்ந்த்தப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் தொகுதியில், 117 ஓட்டுப்பதிவு மையங்களில், 287 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், மொத்த ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 1,496 ஆகும்.
ஓட்டுச்சாவடிகளில், குடிநீர், மின் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி, என அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த கால சம்பவங்கள், தற்போதைய அரசியல் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில், உடுமலை தாலுகாவில், 10, பொள்ளாச்சியில், 4 என, 14 ஓட்டுச்சாவடிகள் பதட்டமான ஓட்டுச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.
மடத்துக்குளத்தில், 8 ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றி, ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 5 பேர் மற்றும் ரிசர்வ் என, 3 ஆயிரம் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பயிற்சி விரைவில் துவங்கப்பட உள்ளது.
ஓட்டுப்பதிவுக்கு தேவையான, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் பாதுகாப்பு மையத்திலிருந்து, இரு நாட்களில் எடுத்து வரப்பட்டு, உடுமலை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசு கலைக்கல்லுாரியிலும், மடத்துக்குளம் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மடத்துக்குளம் கே.டி.எல்.,அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும்.
விழிப்புணர்வு பணிகள்
உடுமலை கோட்டாட்சியர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்வந்த் கண்ணன் கூறியதாவது:
தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கும் வகையில், 'செல்பி பாயின்ட்', கையெழுத்து இயக்கம், பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இளம் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமாக ஓட்டளிக்கும் வகையில், கல்லுாரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.
அரசியல் கட்சியினர் தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியுள்ள 'சுவேதா ஆப்' வாயிலாக, 48 மணி நேரத்திற்கு முன், கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்களுக்கு அனுமதி பெற வேண்டும்.
இதில், பொதுப்பணித்துறை, போலீஸ் டி.எஸ்.பி., தீயணைப்புத்துறை, மின் வாரியம், போக்குவரத்து துறை மற்றும் உதவி தேர்தல் அலுவலர் வாயிலாக, ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்.
அனைத்தும் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படுவதால், முன்னால் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு, தெரிவித்தார்.

