/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் கேரள மசாலா கழிவுகள் திருப்பியனுப்ப அதிகாரிகள் ஏற்பாடு
/
திருப்பூரில் கேரள மசாலா கழிவுகள் திருப்பியனுப்ப அதிகாரிகள் ஏற்பாடு
திருப்பூரில் கேரள மசாலா கழிவுகள் திருப்பியனுப்ப அதிகாரிகள் ஏற்பாடு
திருப்பூரில் கேரள மசாலா கழிவுகள் திருப்பியனுப்ப அதிகாரிகள் ஏற்பாடு
ADDED : அக் 24, 2025 03:44 AM

திருப்பூர்: திருப்பூர் அருகே கொட்டப்பட்டிருந்த கேரள கழிவுகளை, கொட்டிய நிறுவனத்துக்கே திருப்பியனுப்ப அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தி ருப்பூர் மாவட்டம், குண்டடம், சிறுகிணறு கிராமத்தில், தாராபுரம் - ஈரோடு சாலையோரம், அக்., 21ல் மூட்டை, மூட்டையாக பல வண்ண பைகளில் கட்டப்பட்டு, கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதில், துர்நாற்றம் வீசியபடி, ஈ, எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன. மாஸ்க்குகளும் சிதறி கிடந்தன. குண்டடம் பி.டி.ஓ., ரமேஷ் அப்பகுதியில் பார்வையிட்டார்.
ரமேஷ் கூறியதாவது:
கொட்டப்பட்டவை மருத்துவ கழிவு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், கேரள மாநிலம், கொச்சி அருகே செயல்படும் ஏ.வி.பி., குரூப் ஆப் கம்பெனியில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் என்பதும், காலாவதியான மசாலா பாக்கெட்டுகள், மாஸ்க்குகள், கிளவுஸ்கள் இருந்ததும் தெரிந்தது. ஈரோடு மாவட்டம், சித்தோட் டில் இருந்து சென்ற லாரி, இவற்றை கொட்டி சென்றுள்ளது.
கொட்டியவற்றை அப்புறப்படுத்தி, அந்த நிறுவனத்துக்கே, அதே லாரியில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஊதியூர் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. குப்பையை கொட்டியதற்காக, பொது சுகாதார சட்டம், தமிழக ஊராட்சிகள் சட்டத்தின் கீழ், அபராதம் விதிக்கப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

