/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதிகளுக்கு புறம்பாக மனைப்பட்டா அதிகாரிகள் முயற்சிக்கு கண்டனம்
/
விதிகளுக்கு புறம்பாக மனைப்பட்டா அதிகாரிகள் முயற்சிக்கு கண்டனம்
விதிகளுக்கு புறம்பாக மனைப்பட்டா அதிகாரிகள் முயற்சிக்கு கண்டனம்
விதிகளுக்கு புறம்பாக மனைப்பட்டா அதிகாரிகள் முயற்சிக்கு கண்டனம்
ADDED : மே 22, 2025 11:54 PM
திருப்பூர், : தாராபுரம் அருகே பொன்னாபுரம் பகுதியில், விவசாய பயன்பாட்டு நிலத்தில் விதிமுறை களுக்குப் புறம்பாக இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டத்தை கை விட வேண்டும் என, வருவாய் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் அடுத்த பொன்னாபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தீபக் ஹரி, கலெக்டர் மற்றும் தாராபுரம் ஆர்.டி.ஓ.,வுக்கு அனுப்பிய மனு:
பொன்னாபுரம் கிராமம் க.ச., எண் 1179 என்ற இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்க வருவாய் துறையினர் முயற்சி செய்கின்றனர். இதனருகே 150 மீ., துாரத்துக்குள் கோழிப்பண்ணை செயல்படுகிறது. மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் பரிந்துரையின் படி இது போன்ற பண்ணையிலிருந்து 500மீ., அப்பால் மட்டுமே குடியிருப்புகள் அமைய வேண்டும்.
இதுபோல் பெரிய அளவிலான மனைப்பிரிவு அமையும் இடத்தில் சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீடு பெறப்பட வேண்டும். இந்த நிலம் விவசாய பயன்பாட்டு நிலம் என்ற வகைப்பாட்டில் அமைந்துள்ளது. அதனை உரிய நடைமுறைகளின் கீழ் பொது அறிவிப்பு செய்து, கருத்து பெற்று வகை மாற்றம் செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இங்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டால், அது பயனாளிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். விதிகளுக்குப் புறம்பாக மனைப்பட்டா வழங்கும் திட்டத்தை வருவாய்த்துறை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.