/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ரோடு மட்டத்துக்கு மேல் வீட்டை கட்டுங்க' அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு அதிகாரிகள் 'தில்'

ADDED : ஜன 03, 2026 06:05 AM

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சி, தேவராயம்பாளையம் - - காடம்பாடி செல்லும் ரோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. பழைய ரோட்டை அகற்றாமல், ரோடு புதுப்பிக்கப்பட்டது குறித்து, பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
பொதுமக்கள் கூறியதாவது: தேவராயம்பாளையம் - - காடம்பாடி செல்லும் ரோடு, 30 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரோடு அமைக்கும் முன், பழைய ரோட்டை அகற்றிவிட்டு பணிகள் மேற்கொள்ளுமாறு கூறினோம். ஆனால், இரவோடு இரவாக, பழைய ரோட்டின் மேல் புதிய ரோடு போடப்பட்டது. இதனால், ரோட்டின் மட்டம் உயர்ந்து, மழைநீர், வீடுகளுக்குள் போகும் சூழல் உள்ளது.
இது தொடர்பாக ஆய்வுக்கு வந்த ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர்களிடம் கேட்டதற்கு, 'ரோட்டை தோண்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நீங்கள் வேண்டுமானால், ரோடு மட்டத்துக்கு மேல் வீட்டை உயர்த்தி கட்டிக் கொள்ளுங்கள். திட்டமிட்டபடி தான் ரோடு பணி நடக்கும்,' என்றனர்.
பழைய ரோட்டை அகற்றிய பின்னரே ரோடு பணி மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு உள்ளது. இது குறித்து சுட்டிக்காட்டியும், அதிகாரிகள் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், பொறுப்பற்ற முறையில் அதிகாரி அளித்த பதில், மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டு, சாலையை சீரமைத்து தர வேண்டும். இது குறித்து கலெக்டர் மற்றும் பி.டி.ஓ.,விடம் புகார் அளிக்க உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.