/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
/
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED : அக் 23, 2025 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பகுதிகளில், கடந்த, 18ம் தேதி பெய்த கன மழை காரணமாக, மலைமேலுள்ள பஞ்சலிங்க சுவாமிகள் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் இரும்பு பாலம், மலையடிவாரத்திலுள்ள தரைப்பாலம் மற்றும் கன்னிமார் கோவில் உள்ளிட்ட கோவில் வளாகம் ஆகியவை சேதமடைந்தது.
சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் வகையில், அறநிலையத்துறை செயற்பொறியாளர் ஆனந்தராஜ் உமாபதி, உதவி கோட்ட பொறியாளர் கார்த்தி, செயல் அலுவலர் அமரநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திட்ட மதிப்பீடு தயாரித்து, விரைவில் புதுப்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.