/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் கால்வாய் வெட்டி 'கடமை'யாற்றிய அதிகாரிகள்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் கால்வாய் வெட்டி 'கடமை'யாற்றிய அதிகாரிகள்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் கால்வாய் வெட்டி 'கடமை'யாற்றிய அதிகாரிகள்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் கால்வாய் வெட்டி 'கடமை'யாற்றிய அதிகாரிகள்
ADDED : நவ 29, 2024 11:36 PM

உடுமலை: மடத்துக்குளத்தில், குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை தடுக்காமல், கால்வாய் வெட்டி அதிகாரிகள் 'கடமை' யாற்றியுள்ளனர்.
மடத்துக்குளம் பேரூராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு திருமூர்த்தி அணை, தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு இரு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஒன்றிய அலுவலகம் முதல், நான்கு ரோடு சந்திப்பு முதல், பல இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரத்திற்கும் மேல், குடிநீர் வீணாகி வருகிறது.
அதிலும், ஒன்றிய அலுவலகம் மற்றும் நான்கு ரோடு பகுதிகளில், இரு இடங்களில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு, பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள், குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல், வீணாகும் குடிநீர் ரோட்டிற்கு வராமல் இருக்கவும், குளம் போல் தேங்காமல் இருக்கவும், குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியிலிருந்து, பெரிய அளவில், 60 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் வெட்டி வெளியேற்றி, அதிகாரிகள் 'கடமை' ஆற்றியுள்ளனர்.
இதனால், ரோட்டில் வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் தவறி, தற்காலிக கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இரவு நேரங்களில், பைக் மற்றும் நடந்து வருவோர், குடிநீர் கால்வாயில் விழுந்து, காயமடைந்துள்ளனர்.
போக்குவரத்து அதிகம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் வெளியேற்றுவதற்காக, கால்வாய் வெட்டியதற்கு பதில், குழாய் உடைப்பை சரி செய்திருந்தால், பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைத்திருக்கும். பிரதான ரோட்டில் விபத்துக்களும் ஏற்பட வாய்ப்பில்லை, என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.