/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகள்
/
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகள்
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகள்
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு கண்டு கொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜன 29, 2026 05:30 AM
உடுமலை: உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அபரிமிதமான பிளாஸ்டிக் பயன்பாட்டால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கடந்த, 2019 முதல், பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டிற்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பிளாஸ்டிக் கேரி பேக், ஓட்டல்களில் உணவு பொருள் பேக்கிங் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் டைனிங் டேபிள் விரிப்பு, பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் தட்டுக்கள், பிளாஸ்டிக் பூச்சு உள்ள பேப்பர் பிளேட் மற்றும் கப், பிளாஸ்டிக் டம்ளர், ஸ்ட்ரா, பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கோட்டிங் கொண்ட தண்ணீர் டம்ளர்கள், உணவு தட்டுக்கள், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் பைகள், நான்-ஓவன் பேக் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.
பொதுமக்கள், மஞ்சள் பை, எளிதில் மக்கும் பாக்கு மட்டை தட்டுக்கள், வாழை இலை, சில்வர் பாத்திரங்கள், கண்ணாடி டம்ளர்கள், பேப்பர் ஸ்ட்ரா, துணி, சணல், காகித பை, பீங்கான் கப், தட்டுக்கள், மண் பானைகள், கரும்பு சக்கை, மூங்கில் , தேங்காய் சிரட்டை ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு இருந்தால், 10 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். நிறுவனங்கள், கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
ஆனால், அதிகாரிகள் அலட்சியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லாதது ஆகிய காரணங்களினால், உடுமலை நகரம் மற்றும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அதே போல், டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பார்கள், தனியார் மது விற்பனை நிலையங்களிலும், தடையின்றி வழக்கம் போல், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் விற்பனை செய்யப்படுவதோடு, தினமும் பல டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.
எனவே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

