/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூதாட்டியின் கண் தானம்; பொதுமக்கள் நெகிழ்ச்சி
/
மூதாட்டியின் கண் தானம்; பொதுமக்கள் நெகிழ்ச்சி
ADDED : செப் 03, 2025 11:47 PM
அவிநாசி; கருவலுாரில் நான்காவது முறையாக கண் தானம் வழங்கப்பட்டது.
அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தை சேர்ந்த பூவாத்தாள் 80, வயது முதிர்வு காரணமாக இறந்தார். இவரது கண்களை தானம் செய்ய அவரது மகன் ஈஸ்வர மூர்த்தி, முடிவு செய்தார். இதனையறிந்து கருவலுார் ரோட்டரி சங்க பட்டய தலைவர் வேலுசாமி, செயலாளர் இளங்கோவன் மற்றும் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் இணைந்து கண்களை தானமாக பெற்றனர்.
தொடர்ந்து, கருவலுார் ரோட்டரி சங்கம் வாயிலாக, நான்காவது முறையாக கண்கள் தானமாக பெறப்பட்டு இருவருக்கு வழங்கப்பட்டது. கண் தானம், உடல் தானம் செய்ய விரும்புவோர் 99424 99666 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கண் மற்றும் உடல்களை தானமாக வழங்கலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர். கண் தானம் செய்ய முன்வந்த மூதாட்டியின் குடும்பத்தினரை பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.