ADDED : ஆக 10, 2026 04:18 AM

அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை அருகே, ஆம்னி பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில்,பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
புதுச்சேரியிலிருந்து, பொள்ளாச்சிக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் கிளம்பியது. கன்னியாகுமரியை சேர்ந்த டிரைவர் சுரேஷ்குமார்,42, ஓட்டி வந்தார். இந்த பஸ்சில், 36 பேர் பயணம் செய்த நிலையில், 30 பேர், பழநியில் இறங்கினர்.
மீதம் இருந்த, 6 பேருடன், பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், நேற்று காலை, 6:00 மணியளவில், உடுமலை அருகேயுள்ள பாலப்பம்பட்டி அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக பஸ்சிற்குள் இருந்தவர்கள் தப்பினர். உடுமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
