/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆம்னி பஸ்களால் பைபாஸ் ரோட்டில் நெரிசல் தீர்வு காண வலியுறுத்தல்
/
ஆம்னி பஸ்களால் பைபாஸ் ரோட்டில் நெரிசல் தீர்வு காண வலியுறுத்தல்
ஆம்னி பஸ்களால் பைபாஸ் ரோட்டில் நெரிசல் தீர்வு காண வலியுறுத்தல்
ஆம்னி பஸ்களால் பைபாஸ் ரோட்டில் நெரிசல் தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : ஜன 17, 2025 11:55 PM
உடுமலை, ;உடுமலை பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு மற்றும் நகர பகுதிகளை பழநி ரோடு மற்றும் பிற ரோடுகளுடன் இணைக்கும் வகையில், பைபாஸ் ரோடு அமைந்துள்ளது.
இந்த ரோட்டில், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச்செல்லும், 30க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணியரை ஏற்றிச்செல்கின்றன.
இதனால், உடுமலை பைபாஸ் ரோட்டில், மாலை, 7:00 மணி முதல், 10:00 மணி, ஆம்னி பஸ்கள், ரோட்டை ஆக்கிரமித்து வரிசையாக நிறுத்தப்படுகின்றன.
ஏற்கனவே, இந்த ரோட்டில் கடைகள் ஆக்கிரமிப்பும், ரோட்டோர கடைகளும் அதிகளவு உள்ள நிலையில், ஆம்னி பஸ்களும் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
அதே போல், பஸ் ஸ்டாண்டிற்கும் பஸ்கள் செல்வதிலும், வெளியே வருவதிலும் சிக்கல் ஏற்படுவதோடு, பல மணி நேரத்திற்கு பிரதான ரோடுகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, இந்த ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், பைக், கார் மற்றும் சரக்கு வாகனங்கள் நிறுத்தவும் தடை விதிக்க வேண்டும்.
ஆம்னி பஸ்களுக்கு என புறநகர பகுதியில் இடம் ஒதுக்க, போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.